சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய புள்ளியியல் அறிக்கை வெளியீடு
2023-02-28 11:39:55

2022ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய அறிக்கையை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் நாள் வெளியிட்டது.

பூர்வாங்க கணக்கீட்டின்படி, 2022ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 21 லட்சத்து 2070 ஆயிரம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 3.0 விழுக்காடு அதிகரித்தது.

கடந்த ஆண்டின் தானிய விளைச்சல் 68 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் டன் ஆகும். முந்தைய ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகம்.

மேலும், 2022ஆம் ஆண்டின் இறுதியில் சீன மக்கள் தொகை 141 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரமாகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 8 லட்சத்து 50 ஆயிரம் குறைவு. நகரங்களில் நிரந்தர மக்கள் தொகை 92 கோடியே 7 லட்சத்து 10 ஆயிரமாகும்.

கடந்த ஆண்டின் இறுதியில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 73 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரமாகும். அவர்களில் 62.6 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள். அத்துடன், புதிதாக வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 60ஆயிரமாகும். கடந்த ஆண்டு முழுவதும் நகர்ப்புறத்தில் வேலையின்மை விகிதம் சராசரியாக 5.6 விழுக்காடாகும்.