உலக வளர்ச்சி ஒத்துழைப்பு:சீனா
2023-02-28 17:36:03

ஜி 20 அமைப்பின் நடப்புத் தலைவர் நாடான இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்ஷாங்கரின் அழைப்பின் பேரில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் மார்ச் 2ஆம் நாள் இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 28ஆம் நாள் கூறுகையில், சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மன்றமான ஜி 20 அமைப்பு, உலகப் பொருளாதார மீட்சியை மேம்படுத்துவதிலும் உலக வளர்ச்சியிலும் மேலும் பெரிய பங்காற்ற வேண்டும் என்றார். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது, தானிய மற்றும் எரியாற்றல் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளியிட ஜி 20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தைச் சீனா ஊக்குவிக்கும் என்றார் அவர்.