“டிஜிட்டல் சீனா”கட்டுமானத்தின் திட்டம்
2023-02-28 16:50:58

டிஜிட்டல் சீனா கட்டுமானத்தின் ஒட்டுமொத்த உருவரைத் திட்டத்தை அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன அரசு அவை ஆகியவை வெளியிட்டன.

2025ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த முன்னேற்ற அமைப்பு அடிப்படையில் உருவாக்கப்படும். 2035ஆம் ஆண்டில் சீனாவின் டிஜிட்டல் மயமாக்க வளர்ச்சி நிலை உலகின் முன்னணியில் நுழைந்துள்ளது என்று இந்தத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தரவு வள அமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் சீனா உருவாக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நாகரிக கட்டுமானத்துடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பப் புத்தாக்க அமைப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்த வேண்டும் என்று இந்த திட்டத்தில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது.