சீனாவின் கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலை முன்னேற்றம் பற்றிய அறிக்கை
2023-03-01 17:45:07

2022ஆம் ஆண்டில் சீனாவின் கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலையின் முன்னேற்றம் பற்றிய அறிக்கை மார்ச் முதல் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது.

2022ஆம் ஆண்டில் உக்ரைன் நெருக்கடி, புவியமைவு அரசியல், தீவிர வானிலை, எரியாற்றல் சந்தை ஏற்ற இறக்கம் முதலியவை காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், பொதுவாகக் கூறின், உலகளாவிய பசுமை மற்றும் குறைந்த கார்பன் மாற்றத்தின் திசை மாறாது. கடந்த ஓராண்டில் கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலை பற்றிய சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. இந்தப் பணி, ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.