மேல்முறையீட்டு நிறுவனத்தின் புதிய நீதிபதி தேர்தல் தொடங்கும் தீர்மானத்துக்கு 63ஆவது தடை
2023-03-01 11:31:16

உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு நிறுவனம் பிப்ரவரி 27ஆம் நாள் நடத்திய வழமை கூட்டத்தில், அமெரிக்கா மீண்டும் சுயவிருப்பப்படி மறுப்பாணையைப் பயன்படுத்தி, மேல்முறையீட்டு நிறுவனத்தின் புதிய நீதிபதி தேர்தல் நடைமுறையைத் தொடங்கும் தீர்மானத்தை நிராகரித்தது. இதனால், உலக வர்த்தக அமைப்பின் 127 உறுப்பு நாடுகளால் கூட்டாக முன்வைக்கப்பட்ட இத்தீர்மானம் 63ஆவது முறையாகத் தடைப்பட்டுள்ளது. குவாடமாலா பிரதிநிதி உரை நிகழ்த்துகையில், புதிய நீதிபதி தேர்தல் நடைமுறையைத் தடுக்கும் செயலுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. பல உறுப்பு நாடுகளின் உரிமை நலன்களுக்கு இது தீங்குவிளைவித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதற்கு முந்தைய சுங்கவரி மற்றும் வர்த்தகத்துக்கான பொது உடன்படிக்கையின் முக்கிய ஆரம்ப நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். இவ்வமைப்புக்கு அமெரிக்கா அடிக்கடி தொந்தரவு ஏற்படுத்துவதன் காரணம் குறித்து, புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியுடன், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறை சொந்த நலன்களைப் பேணிக்காப்பதற்கு துணைபுரியாமல், தனது வர்த்தக கொள்கையை முன்னேற்றும் செயலைக் கட்டுப்படுத்தியுள்ளது என அமெரிக்கா கருதுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்காவின் பார்வையில், உலக வர்த்தக அமைப்பை சொந்த நலனுக்காகப் பயன்படுத்த முடியாவிட்டால், அதன் சர்ச்சை தீர்வு இயங்குமுறையை முடக்க நிலையில் வைக்க வேண்டும். இதனால் தனக்குப் பாதகமான தீர்ப்பை தவிர்க்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா வர்த்தக பாதுகாப்பு வாதத்தை செயல்படுத்தி, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்புகளின் மீது வர்த்தக போர் தொடுத்து வருகிறது. விதிமுறைக்கு மளிப்பளிப்பது, அமெரிக்க அரசியல்வாதிகளின் வெற்று பேச்சு மட்டுமே. ஆனால், சர்வதேச விதிமுறை அமெரிக்காவின் குடும்ப விதிமுறை அல்லாமல், அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை புரிய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.