உணவுப் பாதுகாப்பு பற்றி முன்வைக்கப்பட்ட 236 வரைவு தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள்
2023-03-01 10:13:09

சீன அரசவையின் கொள்கைகள் பற்றி பிப்ரவரி 28ஆம் நாள் நடத்தப்பட்ட வழமையான கூட்டத்தில், 2022ஆம் ஆண்டு சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் முன்வைத்த வரைவுத் தீர்மானங்கள் மற்றும் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள் வழங்கிய முன்மொழிவுகளின் நடைமுறையாக்கம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தின் பொது பொருளியலாளர் வெய் பாய்காங் அப்போது கூறுகையில், 2022ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்புக்கான பொறுப்பை வலுப்படுத்துவது, தானிய உற்பத்திக்கான கொள்கை ரீதியான ஆதரவுகளை அதிகரிப்பது, வேளாண் துறை சார் பேரழிவு தடுப்பு ஆகியவை தொடர்பான 236 வரைவுத் தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்டன. இவற்றை வேளாண் மற்றும் ஊரக அமைச்சகம் தனித்தனியாக ஆராய்ந்து உணர்வுபூர்வமாகச் செயல்படுத்தி, தானிய உற்பத்திப் பணியைச் செவ்வனே செய்யும் விதம், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.