“நியூ ஸ்டாட்” ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ரஷியா இடைநீக்கம்
2023-03-01 10:15:02

“நியூ ஸ்டாட்”என்னும் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவது பற்றிய சட்டத்தில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 28ஆம் நாள் கையொப்பமிட்டார்.

இச்சட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தினத்தில் உடனடியாக அமலுக்கு வரும். இந்த ஒப்பந்தத்தை ரஷியா எப்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் என்பது, ரஷிய அரசுத் தலைவரால் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவும் அமெரிக்காவும் 2010ஆம் ஆண்டு கூட்டாகக் கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தம், 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் அமலாக்கப்பட்டது.