குன்மிங் நகரில் செர்ரி மலர் விழா
2023-03-02 14:51:41

சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் விலங்கு பூங்காவில் 23ஆவது செர்ரி மலர் விழா மார்ச் முதல் நாள் துவங்கியது. செழிப்பாக மலர்கின்ற செர்ரி மலர்கள் மற்றும் சீன பிகோனியா மலர்கள் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளன. மேலும், இவ்விழாவின்போது, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் சிறப்புக் கண்காட்சி, நாட்டுப்புற இசை மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.