ஐஎம்எஃப் தலைமை இயக்குநருடன் லீ கெச்சியாங் தொலைபேசி மூலம் தொடர்பு
2023-03-02 11:46:34

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் மார்ச் 2ஆம் நாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது லீ கெச்சியாங் கூறுகையில், சிக்கலான சர்வதேச மற்றும் பிரதேச நிலைமையில் சீனா சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து நட்பு ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது. இது, சவால்களைக் கூட்டாகச் சமாளிப்பதில் இருதரப்புக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் துணைபுரியும் என்று தெரிவித்தார். மேலும், தொற்று நோய் பரவிய 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைப் புதுப்பித்து வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 4.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. உலகின் சராசரி நிலையை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜார்ஜியா கூறுகையில், சீராக இயங்கி வரும் சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கிய இயக்காற்றலாக திகழும் என்றும், கடன் நெருக்கடியைச் சமாளிக்க வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் விதம் ஆக்கப்பூர்வ மனப்பாங்குடன் முயற்சி மேற்கொண்டுள்ள சீனாவுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.