பொது மக்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் அமெரிக்க அரசு
2023-03-02 11:10:14

அமெரிக்காவில் அண்மையில் வேதி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடர்வண்டி ஒன்று ஓஹியோ மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. அமெரிக்கச் சுற்றுலா பாதுகாப்பு நிறுவனத் தலைவர் மைக் ரீகன் பிப்ரவரி இறுதியில் விபத்து நடந்த இடத்துக்கு மீண்டும் சென்று அங்குள்ள நீரும் காற்றும் பாதுகாப்பானதாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், இந்நிறுவனத்தின் 2வது பிரதேசத்துக்கான மூன்னாள் பொறுப்பாளர் ஜூடித் என்கே செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், விபத்தினால் உள்ளூர் மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்கு நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்றும், இதனால் காற்று மற்றும் நீரில் மாசு இருக்கும் என உணர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த வேறுபட்ட கருத்துகள், நிவாரண மற்றும் புலனாய்வுப் பணியில் அமெரிக்க அரசுப் பிரிவுகளின் பொறுப்பற்ற அபத்தமான செயல்களை வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய கடுமையான சுற்றுலா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலைமையில், அமெரிக்க அரசியல்வாதிகள் தங்களுக்குரிய பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகின்றனர். அமெரிக்க ஜனநாயகம் பயன் இல்லாத அமைப்புமுறையில், தங்களது சொந்த நலன்களில் கவனம் செலுத்தி வருகின்ற அரசியல்வாதிகளுக்கு, பொது மக்களின் கவலையைத் தீர்க்கும் விருப்பம் இல்லை.

கட்சிகளுக்கிடையில் மோசமாகி வருகின்ற போட்டிகள் மற்றும் பயனற்ற ஜனநாயகம் ஆகியவற்றைக் கொண்ட சூழ்நிலையில், அமெரிக்காவால், பொது மக்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க முடியாது.