வளர்ச்சிக்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய ஐ.நா. கூட்டம்
2023-03-02 11:41:44

வளர்ச்சிக்கான உரிமை பற்றிய அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதம், ஜ.நா. மனித உரிமை கவுன்சில் பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய நாட்களில் உயர் நிலை கூட்டத்தை நடத்தியது.

வளர்ச்சியை முன்னேற்றுபவர் மற்றும் இறுதியில் பயன் பெறுபவரான மனிதரின் மையத் தகுநிலையை இவ்வறிக்கை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. தொடரவல்ல வளர்ச்சி இலக்கு என்பது அனைவரின் பங்கேற்பினால் மட்டுமே நனவாக்க கூடிய ஒன்று என்பதைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.நா. துணை தலைமை செயலாளர் அமினா முகமது தெரிவித்தார்.