மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி கருத்தைப் பின்பற்ற வேண்டும்:சீனப் பிரதிநிதி
2023-03-02 11:35:19

மக்களை மையமாக்க் கொண்ட வளர்ச்சி கருத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சென் சூ பிப்ரவரி 28ஆம் நாள் தெரிவித்தார். வளர்ச்சிக்கான உரிமை பற்றிய அறிக்கையின் 35ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் நடத்திய நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது உலகளவில் நோய் தொற்று, காலநிலை, பொருளாதாரம், உணவு, எரியாற்றல் ஆகியவை தொடர்பான பல நெருக்கடிகள் நிலவுகின்றன. இவை பல்வேறு நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் பொருளாதர மற்றும் சமூக வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகள் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி கருத்தைக் கடைப்பிடித்து, வளர்ச்சியை முன்னேற்றுவது, மக்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவற்றை ஒட்டுமொத்த கொள்கையின் முனைப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இன்னல்களைத் தீர்த்து, தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்துவது என்பது, சீனா முன்வைத்த உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.