இலங்கையில் மண்ணெண்ணெய் விலையை இரண்டாவது முறையாக குறைப்பு
2023-03-02 17:07:03

ஜனவரி மாத மண்ணெண்ணெய் விலைக் குறைப்பிற்கு பிறகு, மீண்டும் விலையை குறைக்க, அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தரான இலங்கை பெற்றோலிய நிறுவனத்தின் முன்மொழிவுக்கு இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.    

இந்த விலை குறைப்பு மார்ச் 1 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் குறைக்கப்பட்டு, 305 ரூபாயாக உள்ளது. 

தொழிற்துறை மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலை 134 ரூபாய் குறைக்கப்பட்டு, 330 ரூபாயாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இலங்கையில் மண்ணெண்ணெய்க்கு அதிக மானியங்கள் வழங்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி காரணமாக மானியங்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.