ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிறைவு
2023-03-03 10:38:23

2 நாட்கள் நீடித்த ஜி20 அமைச்சர்களின் கூட்டம் மார்ச் 2ஆம் நாள் இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் நிறைவு பெற்றது. உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க, ஒத்துழைப்பு மற்றும் பலதரப்புவாதத்தை வலுப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட சாதனை ஆவணத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் ஜி20 அமைப்பின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி காணொலி வழியில் உரை நிகழ்த்திய போது கூறுகையில், வளர்ச்சி, பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கம், நிதியின் நிலைப்புத் தன்மை, உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட அறைக்கூவல்களை ஜி20 அமைப்பு சமாளித்து, தற்போதைய புவியமைவு அரசியலின் பதற்றமான நிலைமையைத் தளர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.