அமெரிக்காவில் குழந்தை ஊழியர் பிரச்சினை தீவிரம்
2023-03-03 20:15:44

அமெரிக்காவின் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ம் நிதியாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 835 தொழில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிட்டத்தட்ட 3800 குழந்தை ஊழியர்களை நியமித்துள்ளன. தவிரவும், அமெரிக்காவின் இலாபம் ஈட்டாத “பண்ணை தொழிலாளர் வேலைவாய்ப்பு சம்மேளனம்”என்ற அமைப்பின் தகவலில், தற்போது அமெரிக்காவில் 5 இலட்சம் முதல் 8 இலட்சம் வரையிலான குழந்தை ஊழியர்கள், பண்ணைகளில் வேலை செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிமை வர்த்தகம், இனவெறி பாகுபாடு முதலியவற்றைப் போல், அமெரிக்காவில் குழந்தை ஊழியர் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை உரிமைகளுக்கான பொது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரே ஒரு ஐ.நா உறுப்பு நாடு அமெரிக்கா ஆகும். குழந்தை ஊழியர் பிரச்சினையால், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு பல முறை அமெரிக்காவைக் குற்றம் சாட்டியுள்ளது. மனித உரிமையை மிக கடுமையாக மீறிய நாடு, அமெரிக்கா தான் என்று சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.