ஜி20 குழு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சின் காங் பங்கேற்பு
2023-03-03 11:07:21

மார்ச் 2ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், புது தில்லியில் ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், தற்போதைய சர்வதேச அளவில் காணப்படும் கொந்தளிப்பான நிலைமை மற்றும் அடிக்கடி தோன்றும் அறைகூவல்களைச் சமாளிக்கும் பொருட்டு, ஜி20 அமைப்பு, பொறுப்பு ஏற்று, உலக வளர்ச்சி மற்றும் செழுமைக்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.

இதற்காக, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, தானிய மற்றும் எரியாற்றல் பாதுகாப்பைப் பேணிக்காத்தல், உலகப் பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துதல், வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய முன்மொழிவுகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் அவர் சந்தித்தார்.