அமெரிக்காவில் தவிர்க்கப்பட முடியாத பொருளாதார வீழ்ச்சி
2023-03-03 11:48:22

தற்போது அமெரிக்கக் கூட்டாட்சி நிதி விகிதம் கடந்த 16 ஆண்டுகளில் மிக உயர் நிலையில் உள்ளது என்ற போதிலும், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் மீதான சந்தை நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பண வீக்க விகிதம் 2 விழுக்காடு என்ற இலக்கை எட்டும் பொருட்டு, அமெரிக்கக் கூட்டாட்சி நிதி விகிதம் 5.25 முதல் 5.5 வரை, மிகக் கூடுதலாக 6 விழுக்காடாக உயர்த்தப்படக்கூடும். இந்நிலையில், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெருமளவில் குறையும் என்று நிபுணர்கள் அண்மையில் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்திருப்பதனால், அந்நாட்டின் பல்வேறு துறைகள் இன்னல்களைச் சந்திக்கும். தற்போது வீட்டு நிலச் சொத்து, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகள் வீழ்ச்சி அடைந்து வருகிறன்ற என்று ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு மையத்தின் இயக்குநர் ராஜீவ் தவான் மார்ச் முதல் நாள் தெரிவித்தார்.