குவாட் கூட்டமைப்பு பிராந்திய அமைதிக்கு நன்மை பயப்பதில் ஈடுபட வேண்டும்:சீனா விருமப்பம்
2023-03-03 17:35:41

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை உருவாக்கும் குவாட் கூட்டமைப்பு பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு நன்மை பயப்பதில் ஈடுபட வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்கூறிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 3ஆம் நாள் இந்தியாவில் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில், அணு ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தலுக்கு அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தவிரவும், விதிமுறையின் அடிப்படையிலான கடல் ஒழுங்கு எதிர்நோக்கும் அறைகூவல்களை உறுதியாக எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.