இலங்கையில் முதலீடுகளை ஈர்க்க பிரதிநிதிகள் நியமித்தல்
2023-03-03 17:37:17

சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்க நாட்டின் பிரதிநிதிகளை நியமித்துள்ளதாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்தப் பிரதிநிதிகள் இலங்கை அரசின் சார்பில் இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா, கத்தார் மற்றும் பிரிட்டனுக்குச் செல்லவுள்ளனர்.

சாத்தியமான முதலீட்டாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவர் என்று அறிக்கையில் கூறப்பட்டது.