ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு ஒத்துழைப்பில் எந்த அரசியல் நிபந்தனையும் இல்லை
2023-03-04 15:49:48

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு முன்வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது வரை,  150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 30க்கும் மேலான சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பு தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் விரிவாகி வருவதுடன், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ஆகியற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றி வருகிறது.  ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் கீழுள்ள  ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கு சீனா எந்த விதமான அரசியல் நிபந்தனையையும் இணைக்கவில்லை. ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடன் இணைந்து, இந்த ஒத்துழைப்பு மேலதிக புதிய முன்னேற்றம் அடைய செய்ய சீனா விரும்புகிறது என்று சீனத் தேசிய மக்கள் பேரவைச் செய்தித் தொடர்பாளர் வாங் சாவ், சனிக்கிழமை, 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.