சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டிக் கூட்டத் தொடர் துவக்கம்
2023-03-04 18:39:29

சீன மக்கள்  அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் சனிக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சீனாவின் உச்சநிலை அரசியல் கலந்தாய்வு அமைப்பான சீன மக்கள்  அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் புதிய தேசிய கமிட்டியின் 5 ஆண்டுக்காலப் பதவிக்காலத்தில் நடத்தி  வரும் முதலாவது ஆண்டுக் கூட்டத் தொடர் ஆகும். 34 துறைகளைச் சேர்ந்த மொத்தம் 2169 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்த ஏழரை நாட்களில், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு  துறைகளில் முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

துவக்க நிகழ்ச்சியில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசியக் கமிட்டித் தலைவர் வாங்யாங் 13ஆவது தேசிய கமிட்டி நிரந்தர குழுவின் சார்பில் பணியறிக்கை வழங்கினார். கடந்த 5ஆண்டுகளில் திட்டமிட்டப்படி ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கி சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது  மாற முடியாத முன்னேற்றப்போக்கில் நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.