மால்வினாஸ் தீவுகள் இறையாண்மை பற்றிய அர்ஜென்டினாவின் நியாயமான கோரிக்கைக்கு உறுதி ஆதரவு
2023-03-04 17:01:59

2016ஆம் ஆண்டு மால்வினாஸ் தீவுகள் பிரச்சினை பற்றி அர்ஜென்டினா மற்றும் பிரிட்டனிடையில் எட்டப்பட்ட ஃபோராடோரி டங்கன் உடன்படிக்கையை நிறுத்தும் முடிவை 20நாடுகள் குழு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, அர்ஜென்டினா பிரிட்டனிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. அர்ஜென்டினாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ 2ஆம் நாள் இதைத் தெரிவித்தார். மேலும், ஐ.நா பொதுப் பேரவையின் 2065ஆம் இலக்கமுடைய தீர்மானத்திற்கிணங்க, மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க வேண்டும் என்றும் பிரிட்டன் தரப்பிடம் கஃபீரோ முன்வைத்தார். மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மை குறித்து அர்ஜென்டினாவின் நியாயமான கோரிக்கை இதுவாகும். இதற்குச் சர்வதேச சமூகம் உறுதியாக ஆதரவளிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில், மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மைப் பிரச்சினையைத் தீர்க்க, அர்ஜென்டினா இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறது. ஐ.நாவின் தொடர்புடைய தீர்மானங்களைப் பின்பற்றி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்புமாறு பிரிட்டனிடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பிரிட்டன் தொடர்ந்து மறுத்து வருகிறது. உண்மையாக, மால்வினாஸ் தீவுகளின் பிரச்சினையில் உண்மை தெளிவானது. காலனியாதிக்க காலத்தில் விட்டுசெல்லப்பட்ட பிரச்சினை இது. அதன் தகாத நலன்களைக் கைவிட விரும்பவில்லை என்பது பிரிட்டன் அர்ஜென்டினாவின் கோரிக்கையைத் தொடர்ந்து பொருட்படுத்தாமல் செயல்பட்ட முக்கிய காரணமாகும்.

மால்வினாஸ் தீவுகளில் நிரந்தரமாகப் ராணுவ முகாமிடுவதாக அறிவிப்பது, ஏவுகணை சோதனை உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகளை நடத்துவது, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் லத்தின் அமெரிக்க இளைஞர்கள் வரலாறு பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்த முயல்வது முதலிய செயல்களைப் பிரிட்டன் கடந்த சில ஆண்டுகளில் நடத்தியுள்ளது. மால்வினாஸ் தீவுகளை நிரந்தரமாக கைப்பற்றுவது அதன் நோக்கமாகும். அதற்கு சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்பு கிடைத்துள்ளது. அர்ஜென்டினா, மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மையைத் திரும்பப் பெறுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் மன்றம், அமெரிக்க கண்ட நாடுகள் அமைப்பு, சீனா உள்ளிட்ட பெரும்பாலான வளரும் நாடுகள் உறுதியாக ஆதரவளிப்பதாக பலமுறை தெரிவித்துள்ளன.