ரஷிய – உக்ரைன் மோதலுக்கு அடிப்படைக் காரணம் ரஷியா அல்ல : லுகாஷென்கோ
2023-03-04 19:42:06

ரஷிய-உக்ரைன் மோதலுக்கு அடிப்படைக் காரணம், ரஷியா அல்ல என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் கருத்தை ஆமோதிப்பதாக பெலாரஸ் அரசுத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்தார்.

சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகையில்

ரஷிய – உக்ரைன் மோதல் ஏற்பட்டு ஓராண்டு கடந்து விட்டது. மோதல் காரணம் பற்றி விவாதித்தால், தொலைத்தூரத்திலேயே முழு காட்சியைப் பார்க்க முடியும் என்ற வாசகம் உண்டு. எனவே, மோதல் காரணத்தை பகுப்பாய்வு செய்வதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். அமைதியாக இருங்கள் பொறுமையாக இருங்கள் என்ற அர்த்தம் கொண்ட‘稍安勿躁’என்ற சீன பழமொழியும் உண்டு. நான் முற்றிலும் புதினின் கருத்தை ஒப்புக்கொண்டேன். மோதலுக்கு அடிப்படைக் காரணம், ரஷியா அல்ல. 2014 முதல் 2015ஆம் நாள் வரை, மின்ஸ்க்கில் மின்ஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டோம். ஆனால்,  ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சல மெர்கல் மற்றும் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஆலந்து சமீபத்தில் கூறியதைப் போலவே, உக்ரைனுக்கு நேரம் வெல்லும் நோக்கில், மின்ஸ்க் வந்தடைந்து உடன்படிக்கையை எட்டுவதை முன்னெடுத்துள்ளனர். தற்போது, முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. உண்மை தோன்றியுள்ளது.  இவை தான், அனைத்து காரணமும். இது தான் அனைத்து சதியும். தற்போது, இந்தப் போர் தொடுக்க விரும்பியவர் யார், அதை முதற்முதலில் தொடங்கியவர் யார் என்பதை தற்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். நான் மீண்டும் ஒருமுறை இதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.