மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கான ஐ.நா உச்சி மாநாடு
2023-03-04 17:21:04

மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கான ஐ.நா. உச்சி மாநாடு 4ஆம் நாள் சனிக்கிழமை கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்றது. ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ், 46 மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்ற சமாளிப்பு, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் முதலிய கருப்பொருட்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் வளர்ச்சி நெறிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்கும் விதம், செயலாக்கக் கூடிய வழிகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

மேலும், மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் பிரச்சினை பற்றிய ஐ.நாவின் கூட்டம் 5முதல் 9ஆம் நாள் வரை டோஹாவில் நடைபெறவுள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, ஐ.நாவின் மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகள் பட்டியில் 46 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில், 33 நாடுகள் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.