மார்ச் 5ஆம் நாள் தேசிய மக்கள் பேரவையில் வழங்கப்பட்ட அரசுப் பணியறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வறுமைப்பு ஒழிப்பு, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சீனா சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலுக்கான சீன வழி என்ற கருப்பொருள் குறித்து, 2023ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்களில் பரந்தளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமான உறவை உருவாக்குவது, சீன நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக திகழ்கிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்தைப் போல, உயிரின வாழ்க்கை சூழல் மேம்பாட்டுப் பணி தொலைதூரம் சென்று, விடாமுயற்சியுடன் இலக்கை அடைய முடியுகிறது. தற்போது, உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இந்த காணொளியில் இருந்து உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புத் துறையில் சீனாவின் முயற்சியையும் முன்னேற்றத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.