2022இல் கடினமாகப் பெற்ற புதிய சாதனைகள்
2023-03-05 09:55:44

2022ஆம் ஆண்டில், சீனப் பொருளாதாரம் நிலையாக வளர்ந்து வந்ததுடன், வளர்ச்சி தரமும் படிப்படியாக உயர்ந்தது. இதனால், ஒட்டுமொத்த சமூக நிலைமையும் நிலையானதாக இருந்தது. சீனாவின் வளர்ச்சி மிகவும் கடினமான முயற்சி மூலம் புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங்கின் அரசுப்பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3விழுக்காடு அதிகரித்தது. நகரப்புறத்தில் புதிதாக அதிகரித்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20இலட்சத்து 60ஆயிரமாகும். நுகர்வோர் விலை குறியீடு 2விழுக்காடு அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.