மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு 50ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி:குட்ரேஸ் வேண்டுகோள்
2023-03-05 16:11:15

மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கான ஐ.நா. உச்சி மாநாடு 4ஆம் நாள் சனிக்கிழமை கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்றது. ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ், மிகவும் வளர்ச்சி குறைந்த 46 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸ் உரைநிகழ்த்தியபோது, மோசமான சுழற்சியில் சிக்கியுள்ள மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு ஆண்டுதோறும் 50ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்குமாறு வளர்ந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொருளாதாரம், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகிய துறைகளில் இந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் விதம் இந்த நிதி பங்காற்ற பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தவிரவும், வளர்ச்சியடைந்த நாடுகள் தலைமையிலான உலக நிதி அமைப்புமுறை, சுய நலன்களை மட்டும் கவனித்து வருவதாக அவர் விமர்சித்தார். இது, மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் வளர்ச்சியை முன்னேற்றவில்லை. மாறாக, கொள்ளையடிக்கும் தன்மையிலான கடன் வழங்கும் முறை உலகில் செல்வ சமமின்மை நிலையைத் தீவிரமாக்கியுள்ளது. மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்குவதற்கு இது வழிவகுத்தது என்று குட்ரேஸ் தெரிவித்தார்.