உலக அமைதி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பாளராகச் செயல்படும் சீனா
2023-03-05 10:25:49

சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப்பின்பற்றுவதிலும், அமைதியான வளர்ச்சி பாதை மற்றும் பஞ்ச சீலக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும்  செயல்பட்டு சீனா, பல்வேறு நாடுகளுடன் நட்பார்ந்த ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது. உலக அமைதியை உருவாக்குபவராகவும், உலகளாவிய வளர்ச்சியின் பங்களிப்பாளாரகவும், சர்வதேச ஒழுங்குப் பாதுகாப்பாளராகவும் சீனா செயல்படுகிறது என்று 5ஆம் நாள் வெளியிட்ட சீன அரசுப் பணியறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, மற்றும் உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு ஆகியவற்றைச் செயல்படுத்தி, மனித குலத்திற்கு பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்க சீனா விரும்புவதாகவும் இப்பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.