அரசு சாரா தொழில் நிறுவனங்களின் உரிமைக்கு பாதுகாப்பு
2023-03-05 10:49:22

அரசு சாரா தொழில் நிறுவனங்களின் சொத்துரிமை மற்றும் தொழில் முனைவோரின் நலன்களை சீனா சட்டப்படி பாதுகாத்து வருகிறது. அரசு சாரா பொருளாதாரம் மற்றும் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் வளர்ந்து விரிவடைவதற்கு அரசு ஊக்கம் அளித்து, நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கு நியாயமான போட்டி சூழலை உருவாக்கி வருகின்றது என்று 5 ஆம் நாள் வெளியான அரசுப்பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், திறந்த சீனச் சந்தை சீனாவிலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.