ஆயிரம் ஆண்டு அதிசயம்
2023-03-05 10:36:46

மார்ச் 5ஆம் நாள் தேசிய மக்கள் பேரவையில் வழங்கப்பட்ட அரசுப் பணியறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வறுமைப்பு ஒழிப்பு, கிராம வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சீனா சாதனை படைத்துள்ளது  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற கருப்பொருள் குறித்து,  சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2023ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்களில் பரந்தளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் கிராம வளர்ச்சியை ஊக்குவிப்பதில், தற்போது ஒரு நல்ல மாதிரியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குய்சோ மாகாணத்தின் ஷிஜியாங் நகரிலுள்ள கிராமம் ஒன்றில், மியௌ இனத்தின் தனித்துவமான வீடுகள் ஆயிரக்கணக்கில் அமைந்துள்ளன. ஷிஜியான்ச்சியன்ஹுமியௌஜாவ் என அழைக்கப்படும் இக்கிராமம் முன்னதாக,  பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலும், வறிய நிலையிலும் பண்பாடு பாதுகாப்புப் பற்றாக்குறை நிலையிலும் சிக்கியுள்ளது. கிராம சுற்றுலா வளர்ச்சி மூலமாகவே,  இந்த வறிய கிராமம், தற்போது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. மேலும், இந்த கிராமம், சிறுபான்மை இனப் பண்பாடுப் பாதுகாப்பு மற்றும் வளமான கிராமம் வளர்ச்சி ஆகியவற்றின் சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது. இன்றைய கிராமத்தில் பழமையும் புதுமையும் நிறைந்திருக்கிறன். எழில்மிக்க இயற்கை சூழல் வளமாக உள்ளது.

இந்தச் சிறப்புக் காணொளி நிகழ்ச்சி மூலம், ஷிஜியான்ச்சியன்ஹுமியௌஜாவ் கிராமத்திற்கு  சுற்றுலா செய்வோம். வாங்க... அதன் அழகைக் கண்டு ரசியுங்கள்.