ஃபுகுஷிமா அணு கழிவு நீர் கடலில் வெளியேற்றும்வது குறித்து கருத்து கணிப்பு
2023-03-06 20:10:26

ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீர் கடலில் வெளியேற்றுவது ஃபுகுஷிமாவின் புகழை பாதிக்கும் என ஃபுகுஷிமா தொலைக்காட்சி நிலையம் மற்றும் ஃபுகுஷிமா மக்கள் செய்தியேடு ஆகியவை மார்ச் 4ஆம் நாளன்று நடத்திய கருத்து கணிப்பில் 90% மக்கள் தெரிவித்தனர்,  இக்கழிவு நீர் வெளியேற்றும் திட்டம் தங்களுக்குப் புரியவில்லை என்று 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தெரிவித்தனர். தவிரவும், அணு உலை கழிவுக் நீரை கடலில் வெளியேற்றுவதன் பாதுகாப்பு குறித்து அரசாங்கமும் டோக்கியோ மின் சக்தி நிறுவனமும் முழுமையாக விளக்கம் அளிக்கவில்லை என்று 65.2 விழுக்காட்டு மக்கள் கருதுகின்றனர்.