உலகிற்கு வாய்ப்புகளைக் கொண்டுவரும் சீன நவீனமயமாக்கம்
2023-03-06 10:43:28

நிதானமான முன்னேற்றத்துடன் கூடிய பொதுப் பணித் திட்டத்தில் ஊன்றி நின்று, ஒட்டுமொத்த பொருளாதாரச் செயலுக்கான மேம்பாட்டை முன்னேற்ற வேண்டும் என்று சீன அரசு 5ஆம் நாள் சீனாவின் அதியுயர் தேசிய அதிகார அமைப்பான சீனத் தேசிய மக்கள் பேரவை பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் அரசு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

உயர் தர வளர்ச்சியை நனவாக்குவது, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளின் முயற்சி மூலம், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 1 கோடியே 21 இலட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. இது. சராசரியாக ஆண்டுக்கு 5.2 விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது.

இவ்வாண்டில் சீனப் பொருளதார வளர்ச்சி எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிலைமையை முழுமையாகக் கருத்தில் கொண்டு, சீனா தனது மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் இலக்கை சுமார் 5 விழுக்காடாக நிர்ணயித்துள்ளது.

உள்நாட்டு தேவையை விரிவுபடுத்தப் பாடுபடுவது, நவீனமான தொழில்துறை அமைப்புக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, வெளிநாட்டு முதலீட்டைப் பெரிய அளவில் ஈர்த்து பயன்படுத்துவது, பெரிய பொருளாதார மற்றும் நிதி அபாயங்களைப் பயனுள்ள முறையில் தடுத்து தீர்ப்பது ஆகியவை இவ்வாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய பணிகளாகும். இது சீனாவின் நவீனமயமாக்கத்தை நிதானமாக முன்னேற்ற உதவுவதோடு மட்டுமல்லாமல், உலகிற்கு மேலதிக வாய்ப்புகளையும் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.