உயர் தர வளர்ச்சியில் ஷிச்சின்பிங் கவனம்
2023-03-06 11:06:56

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள், அரசு பணியறிக்கை பற்றிய ஜியாங்சூ மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் பங்கெடுத்தார். அப்போது, உயர் தர வளர்ச்சி என்ற முதன்மைக் கடமையில் உறுதியாக கவனம் செலுத்த வேண்டுமென்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

உயர் தர வளரச்சியானது, ஷிச்சின்பிங் பொருளாதாரச் சிந்தனையின் ஒரு முக்கிய பகுதியாகும். சீனப் பொருளாதாரத்தின் தர மேம்பாட்டை முன்னெடுப்பது அதன் நோக்கமாகும். அவர் அன்று கூறுகையில், சீனா, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் நெடுநோக்கு திட்டத்தைச் செயலாக்கி, அறிவியல் சிக்கல்களைத் தாமாகவும் சிறப்பாகவும் சமாளிக்கும் தலைசிறந்த அறிவியலாளர்களுக்கு ஆதரவு அளித்து, உலகளவில் செல்வாக்கு உடைய தொழில் அறிவியல் புத்தாக்க மையத்தையும், நவீனமயமான தொழில் அமைப்புமுறையையும் உருவாக்க வேண்டும். உயர் தர சோஷலிச சந்தை பொருளாதார அமைப்பு முறையை உருவாக்கி, உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்க வேண்டும். வேளாண்மை நவீனமயமாக்கம், உயர் தர வளர்ச்சியை நனவாக்குவதற்கான இன்றியமையாத தேவையாகும் என்று தெரிவித்தார்.