தொடர்வண்டி மூலம் மலர்கடலில் இன்பமான பயணம்
2023-03-06 14:37:06

இந்தியா, ரஷியா, வங்காளத்தேசம், தஜிகிஸ்தான், ஏமன், ஈரான் உள்ளிட்ட பட்டுப்பாதை நாடுகளின் இளம் மாணவர்கள் மார்ச் 3ஆம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ஜியான்வெய் மாவட்டத்தில் இன்பமான சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

வசந்தகாலத்தில் அங்கே மலர்ந்திருக்கும் கோல் மலர்கள், தங்கக்கடலைப் போன்று மிகவும் அழகானவை. இளைஞர்கள் சீனப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, அழகான இயற்கைக் காட்சியுடன் படம் எடுத்து மகிழ்ந்தனர்.