பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்:9பேர் பலி
2023-03-06 18:59:51

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் 6ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 9 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். 10பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.

தாக்குதல் நடத்தியவர் ஒருவர் வெடிபொருள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று 22 படையினர் ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி இத்தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.