இந்தியாவில் ஒருமடங்கு அதிகரித்துள்ள நபர்வாரி வருமானம்
2023-03-06 10:47:17

இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறை அமைச்சகத்தைச் சேர்ந்த தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நபர்வாரி வருமானம் ஒரு மடங்கு அதிகரித்து, 172 ஆயிரம் ரூபாயை எட்டியது.

2014-15ஆம் நிதி ஆண்டில் அந்நாட்டின் நபர்வாரி வருமானம் 86 ஆயிரத்து 647 ரூபாயாகும்.

இது பற்றி பொருளியலாளர் ஜெயதி கோஷ் கூறுகையில், வருமான அதிகரிப்பில் பெரும் பகுதி, உச்ச நிலையிலுள்ள 10 விழுகாட்டினரைச் சேர்ந்திருப்பதால், வருமானப் பகிர்வு இன்னும் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது என்றார்.