2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு
2023-03-06 10:47:50

நடப்பாண்டில் சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பின் இலக்கு கிட்டத்தட்ட 5 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 5ஆம் நாள் காலை சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசு பணியறிக்கையில் தெரிவித்தார். பொருளாதார மீட்சிக்கான சீனாவின் மன உறுதியை இது வெளிகாட்டியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இவ்வாண்டின் முதல் இரண்டு திங்களில், சீன பொருளாதார நிலைமை நிதானமாக இருந்தது. ஆக்கத் தொழில், சேவைத் துறை, கட்டுமான தொழில் ஆகியவை வலிமை மிக்க அளவில்  மீட்சியடைந்துள்ளன என்று அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பொருளாதாரம் கோவிட் 19 நோய் தொற்று பாதிப்பிலிருந்து வெகுவாக மீட்சியடைந்துள்ளது என்று ஜப்பானின் க்யோதோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

5 விழுக்காடு என்ற இலக்கு, ஆய்வாளர்களின் மதிப்பீட்டுக்கு இணக்கமான ஒன்று தான் என்று பிரிட்டனின் ஃபினேஷல் டைம்ஸ் 5ஆம் நாள் செய்தி வெளியிட்டது.