தொடர்வண்டியிலிருந்து கசிந்த வேதி பொருட்களால் மண் எரிக்கப்படுவது:கவலை
2023-03-06 15:26:15

நோர்ஃபோக் தெற்கு ரயில்வே நிறுவனம், ஓஹியோ மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை கிழக்குப் பாலஸ்தீன நகரத்தில் விபத்துக்குள்ளான தொடர்வண்டியிலிருந்து கசிந்த வேதி பொருட்களால் மாசுப்படுத்தப்பட்ட மண்ணை எரிப்பதற்காக எரி ஆலைக்குக் கொண்டு செல்வதாக தி கார்டியன் எனும் பிரிட்டன் செய்தித்தாள் 4ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இச்செயலால் உள்ளூர் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் உள்ள மண்ணில் எரிப்பதற்கு உகந்ததல்லா டையாக்சின், பெர்ஃப்ளூரோஅல்கில் உள்ளிட்ட மாசுக்கள் இருப்பதாக குடியிருப்பாளர்கள் மற்றும் வேதியியல் நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

இதனிடையே, இந்த எரிக்கும் திட்டம் ஆபத்தானது என்றும், மாசுக்குள்ளான மண்ணை எரிப்பதென்பது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி பென்னட் தெரிவித்தார்.