நியூயார்கில் கடும் தீ விபத்து
2023-03-06 17:20:56

அமெரிக்காவின் நியூயார்க் மாநகரிலுள்ள ஒரு வணிகக் கட்டிடம் 5ஆம் நாள் கடும் தீ விபத்துக்குள்ளானது. அதில் குறைந்தது 7பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானதாக நியூயார்க் தீயணைப்புத் துறைத் தலைவர் லாரா கேவனாக் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மின்சார வண்டி ஒன்றின் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய லித்தியம் மின்கலம் காரணமாக இருக்க கூடும் என்றும் அவர் கூறினார்.