சீனாவின் தூதாண்மைக் கொள்கை
2023-03-07 14:15:28

மார்ச் 7ஆம் நாள் காலை சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

இதில் சீனத் தூதாண்மைக் கொள்கை மற்றும் வெளிநாட்டு உறவு குறித்து சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கைத்தார். அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கைக் மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், ஷிச்சின்பிங்கின் தூதாண்மை கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பல்வேறு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்பை வளர்த்து, புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதைச் சீனா முன்னேற்றி வருகின்றது. அனைத்து வகையான மேலாதிக்கத்தையும் ஆதிக்க அரசியலையும் உறுதியாக எதிர்த்து, தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைச் சீனா உறுதியாக பாதுகாக்கும் என்றார்.