கடன் வலையின் காரணி சீனா அல்ல:சின் காங்
2023-03-07 11:48:29

சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் 7ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தொடர்புடைய நாடுகள் கடன் வலையில் சிக்கி கொண்டதற்கான காரணம் சீனா அல்ல என்று தெரிவித்தார். புள்ளிவிவரங்களின்படி, வளரும் நாடுகளின் அரசுக் கடன்களில், பல தரப்பு நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக கடன் வழங்குபவரின் பங்கு 80 விழுக்காட்டுக்கு மேலாகும். அவையே தொடர்புடைய நாடுகளின் கடன் சுமையின் முக்கிய காரணியாகும் என்று சின்காங் கூறினார். குறிப்பாக,  கடந்த ஆண்டு முதல், அமெரிக்கா முன் கண்டிராத அளவில் வட்டியை அதிகரித்ததால், மூலதனம் பல்வேறு நாடுகளிலிருந்து பெருமளவு வெளியேறி வருகின்றது. இதனால், சில நாடுகளின் கடன் பிரச்சினை கடுமையாகி வருகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.