தடையால் தடுக்கப்படாத சீன வளர்ச்சி
2023-03-07 14:57:15

சிலிக்கான் சில்லு ஆய்வில் சீனாவின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தடை நடவடிக்கைகள் வேலை செய்யாது. இவை, அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளைக் குறைத்து தொடர்புடைய பொருட்களின் விற்பனையைப் பாதிக்கும் என்று அமெரிக்க தொழில்  முனைவோர் பில் கேட்ஸ் அண்மையில் பேட்டியளித்த போது  கூறினார்.

மேலும் சீனாவின் அரை மின் கடத்தி தொழிற்துறையை அமெரிக்காவின் தடை நடவடிக்கை பாதிக்காது என்று அமெரிக்க பொருளியலாளர் டேவித் கோட்மான் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 6ஆம் நாள் கூறுகையில்,

சீனாவின் வளர்ச்சி எப்போதுமே சொந்த வலிமையின் அடிப்படையில் அமையும். சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்ய முடியாத நடவடிக்கைகள் சீனாவின் சுயவலிமையையும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தில் சீனாவின் மன உறுதி மற்றும் திறமையையும் வலுப்படுத்தும் என்றார்.