சீன-அமெரிக்க உறவு பற்றிய அமெரிக்காவின் கருத்து தவறு
2023-03-07 14:40:47

மார்ச் 7ஆம் நாள் காலை, சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்  கூறுகையில்,

சீனா பற்றி அமெரிக்காவின் கருத்து மற்றும் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. சீனாவை முக்கிய எதிரியாகவும் மிக கடுமையான அறைகூவலாகவும் அமெரிக்கா கருதுவதால் சீனாவின் மீதான அதன் கொள்கை அறிவார்ந்த சரியான பாதையிலிருந்து விலகிச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.