கோடை வெயில் பற்றி இந்திய அரசாங்கக் கூட்டம்
2023-03-07 11:21:22

வரும் கோடைக்கால வெயிலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் உயர் நிலை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடளவில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய திங்களில் இந்தியாவின் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகம் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தெரிவித்தது.

முக்கிய பயிர்களின் விளைச்சல் அளவு, மருத்துவ உள்கட்டமைப்பின் முன்னேற்பாடு, வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் மோடி ஆலோசனை கேட்டறிந்தார்.

வெயிலின் தாக்கத்தினால், நாட்டின் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க்க் கூடும் என்று நிபுணர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.