ஆயுத வழங்கல் மற்றும் தடை நடவடிக்கை உக்ரேன் நெருக்கடியில் உயிர் மீட்சியில் பயன் இல்லை:ஹங்கேரி வெளியுறவு அமைச்சர்
2023-03-07 10:15:20

உள்ளூர் நேரப்படி மார்ச் 6ஆம் நாள், ஹங்கேரி வெளியுறவு மற்றும் அன்னிய பொருளாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் உக்ரேன் நெருக்கடி பற்றி பேசுகையில், உயிர் மீட்சிக்கான ஒரே ஒரு வழிமுறை அமைதியை நனவாக்குவது தான். ஆயுத வழங்கல் மற்றும் தடை நடவடிக்கைகள் அல்ல என்று தெரிவித்தார்.

உக்ரேனுக்கு மேலதிக ஆயுதங்களை வினியோகிப்பதில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் போட்டியிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சிலர் கருதுகின்றனர். தவிரவும், தடை நடவடிக்கைகள் ரஷியாவை விட ஐரோப்பாவை மேலும் மோசமாகப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.