பொது மக்கள் அனைவருக்குமான சீன தனிச்சிறப்பான நவீனமயமாக்கம்
2023-03-07 14:36:32

மார்ச் 7ஆம் நாள் முற்பகல், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,

சீனாவின் நவீனமயமாக்கம், பொது மக்கள் அனைவரும் கூட்டாக செல்வமடைவதற்கான நவீனமயமாக்கமாகும். சிறுபான்மை நாடுகள் மற்றும் மக்களுக்குச் சேவை புரிவது சீனாவின் நவீனமயமாக்கம் இல்லை. வருமான இடைவெளி அதிகரிப்பு, சீனாவின் நவீனமயமாக்கம் இல்லை. சமநிலையில் வளரும் உரிமை பல்வேறு நாட்டவர்களுக்கும் உண்டு என்று தெரிவித்தார்.