பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
2023-03-07 16:49:57

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள தாவோ டி ஓரோ மாகாணத்தில் 7ஆம் நாள் பிற்பகல் ரிக்டர் அளவு கோலில் 6.2ஆகப்பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதுவரை, உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்பு பற்றிய தகவல் இல்லை.

நிலநடுக்கத்துக்குப் பின், பின்னதர்வுகள் ஏற்படக் கூடும் என்று அந்நாட்டின் எரிமலை மற்றும் நிலநடுக்கம் ஆய்வகம் தெரிவித்தது.