140வது ஐஓசி கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது:ஐஓசி முடிவு
2023-03-07 09:36:29

140ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம், அக்டோபர் 15 முதல் 17ஆம் நாள் வரை இந்தியாவின் மும்பையில் நடைபெற உள்ளது என்று சுருக்கமாக ஐஓசி எனப்படும் இக்கமிட்டி திங்கள்கிழமை அறிவித்தது.

கடந்த ஆண்டின் பிப்ரவரி பெய்ஜிங்கில் நடைபெற்ற 139ஆவது ஐஓசி கூட்டத்தில், 140ஆவது ஐஓசி கூட்டம் இந்தியாவில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டில் 86ஆவது ஐஓசி கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.