அமெரிக்கப் பொருளாதாரம் இன்னலில் சிக்கிக்கொள்ளக் கூடும்:அமெரிக்க முன்னால் நிதித் துறை அமைச்சர்
2023-03-07 18:23:27

அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய இன்னும் வாய்ப்பு உண்டு. ஆனால் பொருளாதார சரிவு திடீரென ஏற்படும் அபாயம் இன்னும் நிலவுகிறது. அடுத்த சில மாதங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்னல்களைச் சந்திக்கக் கூடும் என்று அந்நாட்டின் முன்னாள் நிதித் துறை அமைச்சரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியருமான லாரி எச். சம்மர்ஸ் 6ஆம் நாள் எச்சரித்தார்.

அமெரிக்க சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சம்மர்ஸ் மேலும் கூறுகையில், வழக்கத்தின்படி, பணவீக்கத்தைக் கட்டுபடுத்த வட்டி விகிதத்தைத் தொடர்ச்சியாக உயர்த்தி வரும் செயல் பொருளாதார சரிவை விரைவுபடுத்தும் என்றார்.