அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
2023-03-08 10:34:03

அமெரிக்கச் செய்தி ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்றும் அமைப்பின் புதிய தரவுகளின் படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த ஆண்டு நடந்த சம்பவங்களில் 149 பேர் கொல்லப்பட்டனர், ஏறக்குறைய 400 பேர் காயமடைந்துள்ளனர் என்பதைத் தரவுகள் காட்டியுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கிகளை அகற்றுவது கடினமான ஒன்றாகியுள்ளது. துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் அமைப்பு, 2013ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி தரவுகளைக் கண்காணிக்கத் தொடங்கின.

இந்தப் பதிவில் சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளைத் தவிர நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தும் துப்பாக்கி வன்முறைச் சம்பவம், பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவமாகக் கருதப்படுகின்றது.